அப்போதுதான் விடியத்துவங்கி இருந்தது . காலை சுமார் ஐந்தரை மணி இருக்கும் . பெரம்பூர் பூங்காவில் வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வரும் மக்கள் வரத்துவங்கி இருந்தார்கள் . பூங்கா வாயிலில் அருகம் புல் ஜூஸ் , கீரை , கேரட்வியாபாரிகளும் , வெயிட்மெஷின் வைத்துக்கொண்டு பி.எம்.ஐ கண்டுபிடிக்கிற கூட்டமும் கூடியது. யோகா கூட்டம் , ஆன்மிக கூட்டம் , ரியல்எஸ்டேட் புரோக்கர்கள் என பூங்காவின் வழக்கமான அத்தனை மக்களும் படிப்படியாக வந்து பூங்காவை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். சாமுவேல் ஆகிவிட்ட கந்தசாமி வழக்கமாக அந்த நேரத்துக்குதான் அங்கு வருவார் . கந்தசாமி ரயில்வேயில் ஜி.எம்-யிடம் டிரைவர் ஆக வேலை பார்த்து ஓய்வு பெற்றார். 70 களில் சென்னை மாநகரில் பிரபல பாக்ஸராக இருந்தவர். சுகர் வந்த பிறகு பாக்ஸருக்கான எந்த சுவடும் இல்லை. சுகர் இருப்பதால் தினமும் வாக்கிங் போவதை அவசியமாக்கிக் கொண்டார். மெலிந்த தேகம் , கசங்கிய சட்டை , ரப்பர் செருப்பு என எளிமையாகவே இருப்பார் . முன் வழுக்கை இருந்தாலும் பின்னாடி தியாகராஜ பாகவதர் மாதிரி ஒரு ஹேர் ஸ்டைல் வெச்சிருப்பார். கிட்டதட்ட ரஜினி இமயமலைக்குப் போகும...